- ஸ்வர்ணலட்சுமி
பழமொழியும் உணவு பழக்கமும் வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது "வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்"!
நம் சமையலறையில் அஞ்சறைப் பெட்டியில் முக்கிய இடம் வகிக்கும் ஏலக்காய் (elachi) என்றும் ஆங்கிலத்தில் (கார்டமம்)cardamom என்றும் அழைக்கப்படுகிறது.
நறுமணத்தின் பொக்கிஷம் "ஏலக்காய்" இது நாம் சமைக்கும் இனிப்பு ,அனைத்து ஸ்வீட்டுகளிலும் ,சைவ, அசைவ உணவுகளில் குறிப்பாக பிரியாணிக்கு சுவைக்காகவும், வாசனைக்காகவும், உடலுக்கு நன்மை பயக்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
அன்றாடம் அருந்தும் (தேநீர் )ஏலக்காய் டீ அருந்தும் எத்தனை விரும்பிகள் உள்ளனர் இல்லையா?... இதில் பெரிய ஏலக்காய் இந்திய உணவுகளில் ஒரு முக்கிய மசாலாவாக இருந்தாலும் ,சிறிய ஏலக்காய் பொதுவாக வாசனை மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஏலக்காய் என்றால் என்ன?
ஏலக்காய் என்பது இஞ்சி குடும்பத்தில் இருந்து வரும் ஒரு மசாலா. சுழல் வடிவில் முக்கோண குறுக்கு வெட்டு மற்றும் ஒவ்வொரு காய்க்கும் பல விதைகள் உள்ளன. முழு காயாக உணவில் மற்றும் தேநீர், கேக்குகளில், ஸ்வீட், பால் பாயாசம் ,பருப்பு பாயாசம், கீர் போன்றவைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஏலக்காய் மருத்துவ பயன்கள்:
ஏலக்காயில் முக்குவ மருத்துவ குணம் வாய்ந்த நறுமனை எண்ணெய் சினி ஓல் என்ற வேதிப்பொருள்தான் .இது ஆன்ட்டி ஆக்சிடன்ட் தன்மை வாய்ந்தது. "உள் அண்ட ஈளை வன்பித்தம் இவைக்கெல்லாம் ஆல மாங் கமழ் ஏல மருந்தே" என்ற தேரையர் குணவா கடப்பாடல் மூலம் ஏலம் பித்தத்தை குறைக்கும்.
ஏலக்காயில் உள்ள "வாலட்டைல் "என்ற எண்ணை தான் நறுமணத்தை தந்து நோய்களிலிருந்து குணப்படுத்துகிறது. இதில் உள்ள காரக்குணம் வயிற்று பெருமனை குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது. ஈரப்பதம், புரதம் மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் ,இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்கள் உள்ளன.
தொண்டை வலி இருப்பவர்கள் ஏலக்காயும், லவங்கப்பட்டையும் சேர்ந்து தண்ணீரில் கொதிக்க வைத்து கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும் .அடித்தொண்டை அழற்சி ,தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர் காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு குணமாகும்.
சிறுநீர் பை சுழற்சியும், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும். கொதிக்கும் தண்ணீரில் 3 ஏலக்காய் தட்டி போட்டு 6 புதினா இலைகள் போட்டு வடிகட்டி கொடுக்க அடிக்கடி விக்கல் வருபவர்களுக்கு சரியாகும்.
ஏலக்காய் உட்கொள்வதனால் சுவாச செயல்பாட்டை மேம்படுத்தி நுரையீரலுக்கு நன்மை பயக்கும் .*உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மனநிலையை மாற்றும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு.
ஏலக்காய் எப்படி சாப்பிடலாம்?
பல வழிகளில் ஏலக்காயை உட்கொள்ளலாம். அப்படியேமென்றும் சாப்பிடலாம். தேநீர் குடிப்பவர்கள் டீத்தூளுடன் ஏலக்காய் பொடி செய்து பாலுடன் கொதிக்கவிட்டு வடிகட்டி குடிக்கலாம். தினமும் ஒரு ஏலக்காய் இரவில் மென்று சாப்பிட செரிமானம் மேம்படும் வாய் துர்நாற்றம் போக்கும்.
பால் பாயாசம், பருப்பு பாயாசம் மற்றும் கீர் வகைகளில் ஸ்மூதிகளில் பழ ஜூஸ்களில் ,ஆப்பம் செய்யும் பொழுது தேங்காய் பாலில் ஏலக்காய் பொடி சேர்த்து சாப்பிட நறுமணத்துடன் உடலுக்கு நன்மை பயக்கும்.
வெதுவெதுப்பான நீரில் ஏலக்காய் போட்டு குடிப்பது செரிமான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். வாயு தொல்லை மற்றும் வயிறு உப்புசத்தை போக்கும்.
உடப்புடன் ஏலக்காய் பொடி சேர்த்து பல் துலக்கினால் வாய் கெட்ட நாற்றம் இன்றி நறுமணமாகவும் ,ஈறு பலப்படவும் செய்கிறது.
இதனைமென்று சாப்பிட நன்றாக பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்கள், சளியால் இருமல் வந்து அடிக்கடி இருமி வயிற்று வலி வந்தவர்களுக்கும், கூட ஏலக்காய் நல்ல மருந்தாகவும் அமைகிறது.
இத்தனை மருத்துவ குணங்கள் ...ஆ ...ஆ.. இவ்வளவு பயன்கள் உள்ள "வாய் துர்நாற்றம் தீர்க்கும் ஏலக்காய் "பற்றி அறிந்து கொண்டோம் அல்லவா?.. இந்த ஏலக்காய் அளவாக உட்கொள்வது பாதுகாப்பானது. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?
இருபுறமும் காய்ந்த நிலை ஊடே மலர்வனம்…சீழ்க்கை கவிதைப் புத்தக விமர்சனம்
கந்தன் அருள் இருந்தால் துன்பம்.. வந்த வழி ஓடி விடும்.. கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்!
கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
{{comments.comment}}