சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் நீடித்து வருவதால், தவெகவினர் ஜல்லிக்கட்டு போராட்டம் போல போராட்டத்தில் குதிக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது. மறுபக்கம், தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிகரிக்குமாறு மத்திய உளவுத்துறை, தமிழ்நாடு காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ளது. அக்கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டதால், வேறு யாரிடமும் ஆதரவு கேட்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெகவுக்கு ஆதரவாக வந்துள்ளது. வேறு யாரும் இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை.

இதனால் போதிய ஆதரவைத் திரட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது தவெக. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகரிக்குமாறு காவல்துறைக்கு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. போராட்டங்கள் நடைபெறக் கூடிய சூழல் இருப்பதால் கூடுதல் கவனத்துடன் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாம்.
மறுபக்கம் சென்னை மெரீனா கடற்கரையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது போல தவெகவினர் திரண்டு போராட்டம் நடத்தலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இதையடுத்து உழைப்பாளர் சிலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் கூடுதலாக நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை
Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!
ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
{{comments.comment}}