சென்னை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் நாளை மறுநாள் வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன் -கோவா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. இபிஎஸ்.க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா.. பாடல் புகழ்.. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
ஒன்றிணைந்த அதிமுக.. செங்கோட்டையன் சொல்வதே சரி.. ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆதரவு
யார்? யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வெளிப்படையாக கூற வேண்டும்: திருமாவளவன்
செங்கோடையன் பேச்சு... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
Unified ADMK: செங்கோட்டையன் கருத்துக்கு பெருகும் ஆதரவு.. என்ன செய்ய போகிறார் இபிஎஸ்?
செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் மறுத்தால்.. திமுக, தவெகவுக்கு சாதகமாகும் களம்!
செங்கோட்டையன் தனது உடம்பில் ஓடுவது அதிமுக இரத்தம் தான் என்பதை நிரூபித்துவிட்டார்: சசிகலா
பிரிந்து சென்றவர்கள் என்றால்.. நயினார் நாகேந்திரன் முதல் செந்தில் பாலாஜி வரை பெரிய லிஸ்ட்டாச்சே!
{{comments.comment}}