அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, வரும் ஜூன் 12ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சந்திரபாபு நாயுடு ஜூன் 9ஆம் தேதி பதவி ஏற்பதாக கூறப்பட்டது. ஆனால், அதே தேதியில்தான் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆந்திர முதல்வரின் பதவி ஏற்பு விழா ஜூன் 12க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுடன் 16 வது ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 13ஆம் தேதி நடந்து முடிந்தது. ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. ஆளும் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஒரு அணியாகவும், தெலுங்கு தேசம் - பாஜக - பவன் கல்யாண் ஆகியோர் ஒரு அணியாகவும், காங்கிரஸ் இன்னொரு அணியாகவும் போட்டியிட்டனர்.
இதில் தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 135 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜெகன்மோகன் தலைமையிலான ஒஎஸ்ஆர் காங்கிரஸ் படு தோல்வி அடைந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2வது இடத்தை பவன் கல்யாண் கட்சி பிடித்துள்ளது.
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
பாரதீதீ..!
பார் போற்றும் பாரதியே.. பா ஆயிரம் தந்திடு!
ஒவ்வொரு நாளும் தொடங்கும்.. வெள்ளைக்காகிதமாய்.....!
{{comments.comment}}