சென்னை: சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் நேற்று இரவு முதல் காலை வரை விட்டு விட்டுப் பெய்த கன மழையால் ஊரே குளிர்ந்து போய்க் கிடக்கிறது.
ஆவணி மாதத்தில் இப்படி விட்டு வெளுப்பதெல்லாம் ஒரு அரிய சம்பவம்தான். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மட்டுமல்லாமல், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கூட 100 மிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. அதுவும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2 நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது.
இதற்கு முன்பு 1996ம் ஆண்டுதான் இப்படி மழை பெய்துள்ளது. தொடர்ச்சியாக 3 நாட்களாக 100 மிமீட்டருக்கு மேல் அப்போது மழை பெய்திருந்தது. இன்றும் கூட சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 170.5 மிமீ மழை பெய்துள்ளது. மடிப்பாக்கம் 149, நெற்குன்றம் 139, கொரட்டூர் 136 மிமீ மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரத்தை விட ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேல் அதிக அளவிலான மழை பெய்துள்ளது. விடிய விடிய விட்டு விட்டுப் பெய்த கன மழையால் சென்னை நகரமே ஏசி போட்டது போல குளுகுளுவென மாறியுள்ளது. மழை பெய்து போது பல இடங்களில் நீர் தேங்கினாலும் மழை விட்ட பின்னர் நீர் வடிந்து விட்டதால் பெரிய அளவில் பிரச்சினை இல்லை.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}