சென்னை: மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை சென்னை மக்களை ஒரு வழி செய்துவிட்ட நிலையில் இரவு என்று கூட பார்க்காமல் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார்கள் சென்னை மாநகராட்சி ஊழியர்கள். சென்னை மேயர் பிரியா உள்பட அனைத்துத் தரப்பினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
புயல் வருவதற்கு முன்பே மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. தற்போது புயல் வந்து போன பின்னர் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பை சந்திக்க தீவிரமாக களப் பணியாற்றி வருகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்.
மாநகராட்சி மேயர் ஜே. ராதாகிருஷ்ணன் சூறாவளி போல சுழன்று வேலை பார்த்து வருகிறார். நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர் விசிட் அடிக்கிறார். பணிகளை முடுக்கி விடுகிறார். போகும் இடமெல்லாம் மக்கள் அவரிடம் பல்வேறு புகார்களைக் கூறி குமுறினாலும் கூட அவர்களுக்குப் பொறுமையாக பதிலளிக்கிறார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இரவு பகல் பாராமல் களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் டிவீட் கூட போடவில்லை. அந்த அளவுக்கு வேலையில் மும்முரமாக இருக்கிறார்.
மாநகராட்சி அதிகாரிகள் அனைவருமே வெள்ள நிவாரணப் பணிகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர். அனைத்து கவுன்சிலர்களும் களப் பணியில் இறங்கியுள்ளனர். பொதுமக்களும் இவர்களுடன் இறங்கிப் பணியாற்றி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி மீட்புப் படையினர் மாவட்ட பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை மீட்பதிலும், உணவு வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளனர். அதேபோல எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறதோ அங்கெல்லாம் அதை வடிய வைக்கும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வேளச்சேரி பகுதியில் மாநகராட்சி மீட்புப் படையினர் 7 படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை பள்ளிக்கரணை பகுதியில், 283 பேரை மீட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் 155 பேர் ஆண்கள், 102 பேர் பெண்கள், 22 குழந்தைகள், 1 கர்ப்பிணி, 2 நோயாளிகள், 5 குழந்தைகள் மற்றும் 2 நாய்கள் என்று விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}