அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

Apr 05, 2025,05:01 PM IST

சென்னை: சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 



சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக செயல்பட்டு வரும் சதீஷ்குமார் என்பவர் சமீபத்தில் சென்னை கோயம்பேடு பழம் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தர்பூசணி பழங்களில் ஊசியின் மூலம் கெமிக்கல் சேர்த்து சிவப்பு நிறத்தில் விற்கப்படுவதாகவும் அதை மக்கள் வாங்கி சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிப்பதாகவும் வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


இதனால் தர்பூசணி பழங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் ஒரு கிலோ தர்ப்பூசணி 15 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தர்பூசணி குறித்த சர்ச்சைக்குப் பிறகு இரண்டு ரூபாய் கூட வாங்க ஆளில்லை என விவசாயிகள் கடும் அதிர்ருப்தி அடைந்தனர்.

அதேபோல் வயலில் அறுவடை செய்யாமலே தர்பூசணி பழங்கள் அழுகும் நிலையும் ஏற்பட்டது.




இந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாரை  கண்டித்து கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தர்பூசணி பழங்களை சாலையில் போட்டு உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து  உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.


இதற்கிடையே தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தர்ப்பூசணியை செயற்கையாக பழுக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு நாட்களில் தானாகவே படுத்து விடும். தர்பூசணிகள் குறித்து கூறும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.அதிகாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு சிறு குறு வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் வியாபாரிகள் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என கூறியிருந்தார்.


இந்த நிலையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள்  இயக்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தற்போது திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போஸ் என்பவர், சென்னை மாவட்டத்தை கூடுதலாக கவனிப்பார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்

news

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?

news

தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு

news

இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது

news

பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

அதிகம் பார்க்கும் செய்திகள்