சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்க கடலில் உருவான காற்று சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை எதிரொலியால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது. தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் வெயில் அடித்தாலும், ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை நிலவிவரும் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை மாவட்டம் மலைப் பகுதிகள் நீலகிரி, தேனி, தென்காசியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
வெயில் நிலவரம்:
அதே சமயத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}