சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது.. அதிர்ஷ்டவசமாக தப்பினார்.. டிரைவர் காயம்!

Feb 23, 2024,11:03 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி தப்பினார். அதேசமயம், அவரது கார் டிரைவர் லேசான காயமடைந்தார்.


மேயர் பிரியா ராஜன் தனது காரில், ஸ்ரீபெரும்புதூர் நோக்கி இன்று மாலை சென்று கொண்டிருந்தார். காரில் அவர், அவரது தந்தை, உதவியாளர் ஆகியோர் இருந்துள்ளனர். கார் பூந்தமல்லி நெடுஞ்சாலை குப்பம் பகுதியில் சென்றபோது திடீரென அவரது காருக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த கார் சடர்ன் பிரேக் போட்டு நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாவின் கார் டிரைவர், காரை நிறுத்த முயன்றார். ஆனாலும் முன்னால் இருந்த கார் மீது மோதி  மேயரின் கார் நின்றது. 




அவரது கார் திடீரென நின்றதால் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, மேயரின் காரின் பின் பகுதியில் மோதியது. இதனால் காரின் முன்னும் பின்னும் சேதமடைந்தது. இருப்பினும் மேயர் பிரியாவுக்கு காயம் ஏதும் இல்லை. அதேசமயம், அவரது டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 


இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மாற்று கார் கொண்டு வரப்பட்டு மேயர் பிரியா உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றனர்.  இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விபத்தில் மேயர் பிரியாவின் கார் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தில் சிக்கிய மற்ற வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Poem on Life: வாழ்க்கை!

news

இணையத்தில் செம டிரெண்டிங்.. பரபரக்கும் ‘You+Me - Against the World’ திரைப்பட கிளைமேக்ஸ்!

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

அதிகம் பார்க்கும் செய்திகள்