சென்னை : சென்னை மெட்ரோ ரயில் சர்வர் பிரச்சனை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், பயணிகள் வழக்கம் போல் ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளதுள்ளது.
சென்னை மின்சார ரயில்களுக்கு அடுத்த படியாக சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கவும், அவசரமாக அலுவலகம் செல்பவர்கள் நேரத்தை மிச்சம் செய்து, கூட்டத்தில் இடிபடாமல் செல்வதற்கு வசதியாக இருப்பதால் பலரும் மெட்ரோ சேவைகளை பயன்படுத்த துவங்கி உள்ளனர். மொட்ரோ ரயில்களை பயன்படுத்துவோருக்காக பல சலுகைகள், வசதிகள் ஆகியவற்றை சென்னை மெட்ரோ நிர்வாகம் அவ்வவ்போது அறிவித்து வருகிறது.
அப்படி சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் கவுண்டரில் வரிசையில் காத்திருக்காமல் இருப்பதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் நடைமுறை தற்போது இருந்து வருகிறது. பலரும் இதை பயன்படுத்தி வந்தனர். இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் டிக்கெட் எடுக்க முடிந்ததால் பலருக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 17) காலை முதல் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பலரும் ஆன்லைனில் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. மற்றொரு புறம் மெட்ரோ ஸ்டேஷன்களில் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியது. பயணிகளிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததால், தங்களின் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் பயணிகள் ஸ்டேஷன்களில் நேரடியாக சென்று டிக்கெட் எடுத்து, பயணம் செய்யும் படியும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், சிங்கார சென்னை உள்ளிட்ட அனைத்து டிக்கெட்கள், கார்டுகளையும் பெறும் சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் மீண்டும் ஒரு போஸ்ட் போட்டு பயணிகளுக்கு தெளிவுபடுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?
"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
{{comments.comment}}