வம்பாக பேசி சிக்கிய ஆன்மீக பேச்சாளர்.. ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது

Sep 14, 2023,11:31 AM IST

சென்னை:  பெரியார், திருவள்ளுவர், அம்பேத்கர் உள்ளிட்டோர்  குறித்து அவதூறாக பேசியதற்காக ஆன்மீக பேச்சாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டார்.

இந்துத்துவா சிந்தனையாளரும், ஆன்மீக பேச்சாளரும், வி.எச்.பி. முன்னாள் மாநிலத் துணைத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசினார். திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்களை பற்றி ஒருமையில் இழிவாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த இரு நாட்களாக வைரலாகி வந்தது. 



இவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் புகார்களும் வந்தன. அவர் மீது சென்னை காவல்நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆர்.பி.வி.எஸ். மணியனை அவரது சென்னை மாம்பலத்தில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்