சென்னை: தென்மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 18ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால் சென்னையில் நவம்பர் 15ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது அந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழ்நாட்டுக்கு நடுவே நிலை கொண்டுள்ளது. அது தொடர்ந்து வடக்கு தமிழ்நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக வருகிற 18ம் தேதி வரை மிதமான மற்றும் கன மழை தொடரும்.
சென்னையில் விடிய விடிய மிதமான மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. சென்னை கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமும் காணப்பட்டது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னையில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், எம் ஜி ஆர் நகர், மந்தவெளி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு அண்ணா சாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அடை மழை பெய்து வருகிறது.
21 இடங்களில் கன மழை
சென்னையில் 21 இடங்களில் 12 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. காலை 10 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், ஆகிய ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்
6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?
கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!
நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!
சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்
திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!
{{comments.comment}}