LHB கோச்சுடன் நவீனமாக மாறிய.. சேலம் டூ சென்னை எக்ஸ்பிரஸ்.. ரயில்வேக்கு சபாஷ்

Nov 21, 2025,12:58 PM IST

- சுமதி சிவக்குமார்


சேலம்: சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 15ம் தேதி முதல் LHB கோச்சுடன் நவீனமாக இயங்கி வருகிறது. இதனால் சேலம் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர் வழியாக சேலத்திற்கு தினசரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தற்போது மாடர்னாகியுள்ளது. அதாவது நவம்பர் 15 முதல், LHB coachகளுடன் ஜெர்மனியின் புதிய தொழில்நுட்பத்துடன்  இயக்கப்பட்டு வருகிறது.


அதென்ன எல். ஹச். பி கோச்?




இந்த வகை பெட்டிகள் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன. இந்த பெட்டிகளில் அதிர்வு இருக்காது. உயர் தரத்துடன் உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும். பெட்டிகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். பலமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. நவீன கழிவறைகள் என பல வசதிகள் இந்த பெட்டிகளில் இருக்கும்.


சேலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல்வேறு கல்லூரிகளில் படிப்போர், சேலம் விருத்தாசலம் இடையேயான ஊர்களில் வசிக்கும் மாணவர்கள் தங்கள் மேல்படிப்பு மற்றும் கல்லூரி படிப்புக்கு இந்த வண்டியை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் வணிகர்களுக்கும் கூட இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  அதை விட ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் இந்த ரயிலுக்குப் பின்னால் உள்ளது. இந்த ரயிலானது, 1972 ஆம் ஆண்டு வெளியான படம் குறத்தி மகன். அந்தப் படத்தில் கே. ஆர். விஜயா இரவு 11 மணிக்கு ரயில் வண்டியை தவற விடும் காட்சி வரும். அவர் தவற விட்ட ரயில் இந்த சேலம் - சென்னை ரயில்தான். சின்னசேலத்தில் இருந்து தண்டவாளத்தில் நடந்தே வருவார் கே.ஆர்.விஜயா. அத்தனை சிறப்பு மிக்க ரயில் இது. 


(சுமதி சிவக்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

88 லட்சம் கோடி முதலீடு.. சவூதி - அமெரிக்கா உடன்பாடு.. நேட்டோ அல்லாத நாடக சவூதி அங்கீகரிப்பு

news

LHB கோச்சுடன் நவீனமாக மாறிய.. சேலம் டூ சென்னை எக்ஸ்பிரஸ்.. ரயில்வேக்கு சபாஷ்

news

மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

news

மழையிடம் வரிசைகட்டி நின்றனர்.. எங்கும் மகிழ்ச்சி!

news

மரம் செடி கொடி மேல் மோகம் கொண்டு.. மேகம் விடும் தூது மழை...!

news

எது தரமான கல்வி ?

news

சவரனுக்கு ரூ.92,000க்கு கீழ் சரிந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.320 குறைவு!

news

ஆடம்பரம், படோடபம்.. வீணாகும் உணவுகள்.. கேளிக்கையாகிப் போன திருமண விழாக்கள்

news

ஜி 20 உச்சி மாநாடு.. பிரதமர் மோடி 3 நாள் தென் ஆப்பிரிக்கா பயணம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்