சம்மர் பிரிச்செடுத்தா என்ன.. வாட்டருக்குப் பிரச்சினை வராது.. சென்னைக்கு ஜாலிதான்!

Apr 24, 2023,12:10 PM IST
சென்னை: சென்னையில் கோடை காலம் ஆரம்பித்து விட்டது. அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்பாகவே வெயில் வெளுக்கிறது. இருப்பினும் குடிநீர் விநியோகம் இந்த முறை பெரிதாக பாதிக்காது என்று நம்பலாம்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி விட்டது. இடையில் கோடை மழை ஆங்காங்கு பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் சென்னை மக்களுக்கு ஒரு வித்தியாசமான பிரச்சினை வருடா வருடம் வரும். மழைக்காலத்தில் ஓவர் தண்ணீராக இருக்கும் ஊரெல்லாம் . ஊரே  மிதக்கும் நிலை வரும். அதுவே கோடைகாலத்தில் குடிநீருக்குப் பற்றாக்குறை வரும். இப்படி ஒரு வித்தியாசமான சூழலை ஆண்டுதோறும் சென்னை மக்கள் சந்தித்து வருவது வழக்கம்தான்.

ஆனால் இந்த முறை மழைக்காலத்தில் பெரிய அளவில் சென்னை பாதிக்கப்படவில்லை. அதேபோல கோடை காலத்திலும் குடிநீருக்குப் பிரச்சினை வராது என்றே தெரிகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள், நீர்த்தேக்கங்களில் போதியஅளவுக்கு நீர் இருப்பு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 24ம் தேதி நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் (அடிகளில்)

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை - 35.95 (கொள்ளளவு: 36.61)
பூண்டி - 27.58 (35.00)
செம்பரம்பாக்கம் - 20.88 (24.00)
புழல் - 17.07 (21.20)
சோழவரம் - 16.81 (18.86)
வீராணம் - 11.65 (15.60)

எனவே இந்த கோடைகாலத்தை குடிநீர்ப் பிரச்சினை இல்லாமல் கழிக்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். அதேசமயம், போதுமான அளவில் கோடை மழையும் பெய்தால் நன்றாக இருக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்