சென்னை: மழையால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், அணைகள் அனைத்து நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டிடத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டோம். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. மீட்பு பணிக்காக தென்காசிக்கு அமைச்சர் கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அனுப்பி வைத்துள்ளோம்.
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி ரூ. 2000 பொது மக்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. எவ்வளவு மழை பாதிப்பு ஏற்பட்டாலும் அதை சந்திக்க அரசு தயாராக உள்ளது. மழை காரணமாக மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு வந்ததாக தகவல் வரவில்லை. ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கும் முன்பு உரிய முன்னெச்சரிக்கை கொடுக்கப்படுகிறது.
ஒன்றிய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை. மழை நிலவரம், பாதிப்புகள், அணைகளின் நீர் திறப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஒன்று சேர்த்து கடுமையாக எதிர்ப்போம். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்போம் என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
 
                                                                            கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}