கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை

Dec 26, 2025,11:08 AM IST

சுமதி சிவக்குமார் 


கள்ளக்குறிச்சி: முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் வருகிறார். இங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்து வைப்பதுடன் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சிலையையும் திறந்து வைக்க உள்ளார். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள்ளிக்குறிச்சியில் கள ஆய்வு மேற்கொள்ள வருகிறார். இதனை முன்னிட்டு காலை 10 மணியளவில் தியாகதுருகம் சாலையில் திமுக சார்பில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ஏ. வ. வேலு தலைமையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 


புதிய பஸ் நிலையம் திறப்பு விழா




அதனை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அதனை பின்னர் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா அருகில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் வெண்கல சிலையையும் திறந்து வைக்கிறார். அதன்பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மேடைக்கு வந்து சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். 


புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு


தொடர்ந்து கள்ளக்குறிச்சி டோல்கேட் அருகில் அனைத்து வசதிகளுடன், அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவகத்தை  திறந்து வைக்கிறார். இந்த கட்டிடம் 8 தளங்களை கொண்டது.  ரூபாய் 139 கோடியே 41 லட்ச மதிப்பீட்டில் 35.18 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 


இதனால் கள்ளக்குறிச்சி முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே திமுக கொடிகளும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி முடித்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை  செல்கிறார்.


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரு பேனாவின் முனுமுனுப்பு.. The Whisper of the PEN

news

போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!

news

அரசியல் பேசத் தடை...நாளை ஜனநாயகன் ஆடியோ விழாவில் விஜய் என்ன பேசுவார்?

news

அம்மா உணவகம் போல... டெல்லியில் அடல் உணவகம்... 5 ரூபாய்க்கு இரண்டு வேளை சாப்பாடு!

news

ஒரே அரிசி, பலவகை கஞ்சி.. காய்ச்சல் இருந்தால் இதை சாப்பிட்டுப் பாருங்க!

news

டிசம்பர் 26 என்ன தினம் என்று நினைவில் வருகிறதா?

news

கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை

news

வாழ்க்கையை கற்றுத் தரும் இடியாப்பம்ம்ம்ம்ம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 26, 2025... இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும்

அதிகம் பார்க்கும் செய்திகள்