சென்னை: தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டியில் மாணவர் சேர்க்கை குறைவு உள்கட்டமைப்பு இல்லாதது போன்ற பல காரணங்களால் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.இ,பி.டெக், ஆகிய படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. நடப்பு கல்லியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. பொறியியல் கலந்தாய்வை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வு இன்று முதல் செப்., 11ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29 முதல் தொடங்குகிறது. இந்தாண்டு நடக்கும் கலந்தாய்வில், 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல காரணங்களால் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் ரத்து செய்துள்ளது. இந்த ஆண்டு போலவே சென்ற ஆண்டும் 11 கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}