நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

Apr 04, 2025,06:49 PM IST


சென்னை: தமிழ்நாடு நிறைவேற்றிய நீட் தேர்வு சட்ட மசோதாவை ஒன்றிய அரசு மறுத்துவிட்டதால் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக தொடர்ந்து போராடும். நீட்  விவகாரத்தில்  ஏப்ரல் ஒன்பதாம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழக சட்டப் பேரவை இன்று கூடியது. அப்போது அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதி மறுத்ததாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறினர். இதனை தொடர்ந்து  நீட் விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியான  அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 




நீட் தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது. நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு  மருத்துவ படிப்பு என்பது எட்டா கனியாக உள்ளது. மருத்துவத்துறையில் நாட்டிற்கு முன்னோடியாக திகழ்கிறது தமிழ்நாடு. நுழைவுத் தேர்வு ரத்து செய்வதன் பயனாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம். 


கடந்த 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வு விலக்கு அளிக்கும் சட்டம் முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவு மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி மசோதா அனுப்பப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால் பல்வேறு விளக்கங்கள் அளித்த பிறகும் கூட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மசோதாவை மத்திய அரசு மறுத்து விட்டதால் தமிழக அரசின் சட்ட ரீதியான போராட்டம் தொடரும். 

 நீட் விவகாரத்தில் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சட்டமன்ற  அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்