சென்னை: பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 7 பெண்களுக்கு நீதிமன்றம் அறிவித்த நிவாரண தொகையுடன், கூடுதலாக தலா 25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி வழக்கில் கடந்த ஆறு வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் தீர்ப்பு கிடைத்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என குறிப்பிட்டு, சாகும் வரை அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பாதிக்கப்பட்ட ஏழு பெண்களுக்கும் தலா 10 முதல் 15 லட்சம் வரை என மொத்தம் 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் மொத்தமாக அறிவித்த 85 லட்சம் நிவாரண தொகையுடன் கூடுதலாக தலா 25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் நீதிமன்றம் விசாரணைக் குழு ஒத்துழைப்பும் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.
அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது.அந்த வகையில் நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் முதல்வர் மு.க உத்தரவிட்டுள்ளார்.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}