தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

May 30, 2025,05:57 PM IST
சென்னை: 2025- 26 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

திமுக ஆட்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளன. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, ஆதிதிராவிட பழங்குடியினர் நலத்திட்டம், குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், விடியல் பயணத்திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.





குறிப்பாக கல்விக்கென்று பல்வேறு திட்டங்கள் தனி சிறப்பு பெற்றுள்ளன. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டத்தில் மூலம் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற 28 இலட்சம் மாணவர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்குதல், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில்  அரசுப் பள்ளி மாணவ மாணவியர் தொழில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் அனைத்தும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வருவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

அந்த வகையில் தற்போது கல்விக்கு என்றே மீண்டும் ஒரு சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது  கிராமப்புற மாணவர்களிடையே உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கிலும்,அதிக அளவில் மாணவர்கள் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் நோக்கிலும், 2025-26 ஆம் கல்வியாண்டில் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, வேலூரில் உள்ள கே.வி குப்பம், திருச்சி திருச்சி மாவட்டம்  துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய நான்கு இடங்களில் இந்தப் புதிய கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்