நாகை: நாகை திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் இல்ல விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், இவன் என்ன அழைப்பது.. நாம் என்ன போவது என்று கௌரவம் பார்க்காதீர்கள்.. இது நம்முடைய உரிமை என அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக நாகை மாவட்ட செயலாளர் என்.கௌதமன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நாகை சென்றார். அப்போது மக்கள் வழியெங்கும் உற்சாகத்துடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர் என் கௌதமன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,
மும்மொழி கொள்கையை கட்டாயப்படுத்தி கொண்டு வர வேண்டும் என்று இன்றைக்கு மத்திய அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அதேபோல் தொகுதி மறு சீரமைப்பு அதையும் கொண்டுவந்து எப்படியாவது தமிழ்நாட்டின் உரிமைகள், எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அதனால் வருகின்ற ஐந்தாம் தேதி நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 40 கட்சிகள் யார் யார் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்களோ அந்த 40 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் வருவதாக நமக்கு செய்திகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், குறிப்பிட்ட ஒரு சிலர் தாங்கள் வர முடியாது என செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள். நான் அவர்களை எல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புவது வர முடியாது, வர இயலாது என கூறியவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவும். இது தனிப்பட்ட திமுகவுக்கோ தனிப்பட்ட உங்களுக்கோ இருக்கும் பிரச்சனை கிடையாது. தனிப்பட்ட கட்சிக்கும் அல்ல. இது அரசியலாக பார்க்காதீர்கள். இது நம்முடைய உரிமை. தமிழகத்தினுடைய உரிமை. இன்றைக்கு 39 எம்பிக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களை வைத்துக்கொண்டு போராடிகொண்டிருக்கிறோம்.
அதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து மீண்டும் இந்த திருமண விழா மூலமாக தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு வர முடியாது என்று சொன்னவர்கள் தயவு கூர்ந்து வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். இதில் கௌரவம் பார்க்காதீர்கள். இவன் என்ன அழைப்பது. நாம் என்ன போவது என்று நினைக்காதீர்கள். இது தமிழ்நாட்டினுடைய பிரச்சனை. அதை சிந்தித்துப் பார்த்து நீங்கள் வரவேண்டும் என்று இந்த நேரத்தில் அழைப்பு விடுக்கிறேன்.
மேலும், இந்த திருமண விழாவை முடித்துவிட்டு கௌதமன் ஏற்பாடு செய்துள்ள இன்னொரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். அங்கு மாவட்ட கழகத்தினுடைய அலுவலகத்தில் கட்டடத்தை திறந்து வைத்து நமது அண்ணா சிலை கலைஞர் சிலையை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
இதனை தொடர்ந்து நாகையில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}