சென்னை: பெருந்தலைவர் காமராஜர் குறித்து கலமூட்டிக் குளிர் காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் தராதீர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை:
பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!
அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார்.
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் -முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் தகவல்!
திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆசிரியர்கள் போராடுகின்றனர்... சீமான் ஆவேசம்!
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு விராட் கோலி விடுத்த வீடியோ அழைப்பே காரணம்.. கர்நாடக அரசு
ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் சப்ளையை கேப்டன்தான் துண்டித்தார்.. அமெரிக்க ஊடகம் தகவல்
ஆகஸ்ட் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு!
காமராஜர்.. உயிருடன் இருந்தபோது தொடங்கியது.. திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்
காமராஜர் குறித்து பரப்பிய கட்டுக்கதைகள்.. ஜோதிமணி வேதனை.. பெரிதுபடுத்தாதீர்கள்.. திருச்சி சிவா!
வயிறு உப்புசமா இருக்கா?.. இதுக்கு இந்த பழக்க வழக்கங்களே காரணமா இருக்கலாம்!
{{comments.comment}}