சென்னை: நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இன்று நடந்த அத்துமீறல் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக தெரிவித்துள்ள கருத்து:

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த வரலாறு காணாத பாதுகாப்பு குளறுபடியால் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தாமதம் இல்லாமல் இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாரோ அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். ஜனநாயகத்தின் தூணான நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
{{comments.comment}}