சென்னை: முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில், நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக்கூடாது என அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
2025 -26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் இம்மாத இறுதியில் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு துறை ரீதியாக பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதே சமயத்தில் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முதல்வர்
மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி,நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. தமிழகம் அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ச்சியடைய வேண்டுமென்ற நோக்கில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் முக்கிய இலக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளி துறையில் பத்தாயிரம் கோடி
முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் குறைந்தபட்சம் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் விண்வெளித் துறையில் தகுதியானவர்களை ஊக்குவித்தல், 300 கோடிக்கு மேலான முதலீடுகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டங்கள் அனைத்தையும் அமைச்சரவையில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஒப்புதல் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி மற்றும் துரைமுருகன் ஆகியோர் பேச்சுக்கு ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. இந்த நிலையில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்பட கூடாது என அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}