அமெரிக்கா சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஆட்டம் பாட்டத்துடன் அமர்க்களமான வரவேற்பு!

Aug 29, 2024,11:17 AM IST

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


தமிழ்நாட்டை பொருளாதார மாநிலமாக உயர்த்த முதல்வர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் சென்னையிலிருந்து விமான மூலமாக புறப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு அவர் 17 நாட்கள் தங்கி இருந்து முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்தும் பேசவும், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.




சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். ஆகஸ்ட் 31ம் தேதி, புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேச இருக்கிறார் முதல்வர். செப்டம்பர் இரண்டாம் தேதி சிகாகோவில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி அயலக தமிழர்களின் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறார். இதன் பின்னர் அமெரிக்கா பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.


இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் டிஆர்பி ராஜா மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள்  பொன்னாடை போர்த்தி பூங்கொத்துக்கள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார். அப்போது விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் என்ற பெயர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து  தாரைதப்பட்டைகள் முழங்க  தமிழ் மொழி.. வாழ்க வாழ்க.. என்ற பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் நடனமாடி முதல்வர் மு க ஸ்டாலினை வரவேற்றனர். பின்னர் மகிழ்ச்சி வெள்ளத்தில் இரு கைகளை தட்டி மாணவர்கள் முதல்வரை வரவேற்று செல்பி எடுத்துக் கொண்டனர்.


நடிகர் நெப்போலியன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

news

"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்

news

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்

news

அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!

news

தீபாவளி பண்டிகை 2026 : தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு!

news

Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

news

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!

news

ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்