சென்னை: நடிகர் அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பிராமையா மகன் உமாபதிக்கும் நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில், இவர்களின் திருமண விழா அழைப்பிதழை முதல்வர் மு க ஸ்டாலின் அலுவலகத்தில் நேரில் சென்று அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா இருவரும் குடும்பத்துடன் இன்று வழங்கினர்.
நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து சொல்லி விடவா என்ற படத்திலும் நடித்தவர். இதுதவிர கன்னட மொழியிலும் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் குணசித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் சிறந்து விளங்குபவர் நடிகர் தம்பி ராமையா. இவருக்கு உமாபதி என்ற மகன் உள்ளார். இவர் தமிழில் அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படம் மூலம் அறிமுகமானவர். இதனை அடுத்து மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமையா மகன் உமாபதியும் காதலித்து வந்தனர். தங்கள் காதலை குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர். இரு வீட்டாரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவே கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி இவர்களது நிச்சயதார்த்தம் அர்ஜூனின் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பிரமாண்டமாக நடைபெற்றது.
நிச்சயதார்த்த விழாவில் நடிகர் விஷால், இயக்குனர் சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இரு வீட்டாரின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா - உமாபதி ராமையா இருவர்களுடைய திருமணம் ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாம். இந்த திருமணம் சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் பெரிய தோட்டத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ள நிலையில், திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாம்.
நடிகர் அர்ஜுன் தரப்பிலிருந்து தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் பிரபல நட்சத்திரங்கள், உறவினர்கள், மற்றும் முக்கிய தலைவர்கள் என பலர் கலந்து கொள்ள இருப்பதால் மிகப் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறதாம். ஆனால் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், உமாபதிக்கும் நடைபெறும் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகர் தம்பி ராமையா குடும்பத்தினர்கள் முதல்வர் மு க ஸ்டாலின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி உள்ளனர். ஐஸ்வர்யா மற்றும் உமாபதி ராமையா இவர்களது திருமண அழைப்பிதழை முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் பெற்றுக் கொண்டார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}