சென்னை: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி விடுத்துள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 10 கேள்விகளைக் கேட்டு அறிக்கை விடுத்திருந்தார். அதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு எக்ஸ் பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:

- ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி?
- நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?
- ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?
- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
- பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?
- இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?
- கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?
இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா? என்று முதல்வர் கேட்டுள்ளார்.
விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!
பார்வதி தேவியின் அவதாரம்.. தேவாங்க குலத்தவரின் குல தெய்வம்.. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!
வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!
தாலாட்டும் நினைவுகள்!
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
முடியலடா.. முடியலையே!
முகத்துக்குப் போடலாம்.. மனதுக்குப் போடலாமா.. Massive Mask!
இப்படியும் ஒரு விழாவா.. சின்ன சேலத்தை அசர வைத்த ஜவுளி சங்க விழா!
சதம்!
{{comments.comment}}