அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

Apr 18, 2025,05:44 PM IST

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின், அமிக்ஷா அல்ல. எந்த ஷா வந்தாலும் உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. உங்கள் பரிவாரங்கள் எல்லாம் கூட்டிட்டு வாங்க‌. ஒரு கை பார்ப்போம் என சவால் விட்டு பேசினார்.


திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் மு க ஸ்டாலின், அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர்  கூறியதாவது, ‌




திருவள்ளூர் மாவட்டத்திற்கு பல திட்டங்களை கேட்டு வாங்கி சாதனை படைத்துள்ளனர். இதனால் பாடுபட்ட வருவாய்த்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது ஸ்பெஷல் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.


வாழ்விடம் என்பது மக்களுக்கு அத்தியாவசியம். அந்த உரிமையை கொடுப்பதுதான் நமது திராவிட மாடல் அரசு. திருவள்ளூருக்கு வந்துவிட்டு உங்கள் எதிர்பார்ப்புகளை நான் நிறைவேற்ற முடியாமல் போக முடியுமா. அதனால் புதிதாக ஐந்து திட்டங்களை நான் வெளியிட போகிறேன். முதல் அறிவிப்பு கடம்பூர்  ஊராட்சி ஒன்றியம், தண்டலம், உள்ளிட்ட சாலைகளில் கூவம் ஆற்றியின் குறுக்கே 20 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் அமைக்கப்படும். 


இரண்டாவது அறிவிப்பு திருவலங்காடு ஊராட்சி ஒன்றியம் மணவூர் லட்சுமி பிட்டர் சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 23 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.


மூன்றாவது அறிவிப்பு திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் தாமரைக் குளம் மேம்படுத்தக்கூடிய பணிகளுக்கு 2 கோடியே 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.


நான்காவது அறிவிப்பு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்புதர ஏரியாக இருக்கக்கூடிய பழவேற்காடு ஏரி பறவைகளுக்கான வாழ்விடமும் சுற்றுலா தளமாக விளங்குகிறது. இந்தப் பகுதிகளில் சூழல்வியல் சுற்றுலாத்தலம் அமைக்கப்படும். மேலும் அங்கு இருக்க கூடிய வைரவன் கிராம மீனவ குப்பத்தில் மீனவர்களின் பயன்பாட்டிற்கு வலை பின்னும் கூடம் அமைக்கப்படும். 


இறுதியாக மிக முக்கியமான ஐந்தாவது அறிவிப்பு வாகன நெருக்கம் அதிகமாக இருக்கக்கூடிய ஊத்துக்கோட்டை சாலை பகுதிகளில் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகளை அகலப்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். 


இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைகிறார்கள். அதனால்தான் தமிழ்நாடு அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைகிறது. விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மக்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.

காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவரின் வருகை அதிகரித்துள்ளது. தாய்மார்களின் சுமை குறைந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்படி திமுக ஆட்சி ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறது. தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.


நமது ஆட்சியின் மீது எந்த குறையும் சொல்ல முடியாததால் சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். ஆனால்  தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளாக செயல்படாமல் எதிரி கட்சிகளாக செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளனர். தமிழ்நாட்டை அடகு வைக்க வேண்டும் இதுதான் அந்த சந்தர்ப்பவாதிகளுடைய எண்ணமாக இருக்கிறது.அமித்ஷா அல்ல.எந்த  ஷா வந்தாலும் சரி தமிழ்நாட்டை உங்களால் ஆள முடியாது. உங்கள் பரிவாரங்களை எல்லோரையும் சேர்த்துட்டு வாங்க.ஒரு கை பார்ப்போம். மாநில அகில இந்திய முகமாக திமுக இருக்கிறது என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பேங்க் போக வேண்டிய வேலை இருக்கா.. தயவு செய்து 5ம் தேதி போகாதீங்க... இந்த மாநிலங்களில் லீவு!

news

கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 04, 2025... இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் ராசிகள்

news

மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

news

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

news

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

news

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!

news

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்