சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொள்ள மத்திய திட்ட குழு மாற்றி அமைக்கப்பட்டு,நிதி ஆயோக் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அரசின் திட்டங்கள், கூட்டாட்சியை வளர்ப்பது, சரியான திட்டமிடல், தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக ஒவ்வொரு வருடமும் இந்த நிதி ஆயோக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர்கள் பங்கேற்பார்கள்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் நாளை, மே 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை 9:30 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்படுகிறார். முதல்வர் டெல்லி வந்தடைந்ததும் அவரை வரவேற்க திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், ஏ.வ.வேலு உள்ளிட்டோர் முன்கூட்டியே டெல்லிக்கு சென்று சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனையடுத்து முதல்வர்
மு.க பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு வலியுறுத்த இருக்கிறார். பிறகு இன்று இரவு டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் தங்குகிறார்.
இதனையடுத்து நாளை நடைபெறும் நிதி ஆயாக் நிர்வாகக் குழு கூட்டத்தில் முதல் மு க ஸ்டாலின் பங்கே இருக்கிறார் பிறகு அன்று மாலை மீண்டும் சென்னை திரும்புகிறார்.
முன்னதாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த நிதி ஆயோக் கூட்டத்தில், ஆந்திரா பீகார் போன்ற மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டதாகவும், தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்கவில்லை எனவும் முதல்வர் மு க ஸ்டாலின் கூட்டத்தை புறக்கணித்தார் என்பது நினைவிருக்கலாம்.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
ஐங்கரன் (நெடுங்கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
{{comments.comment}}