சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கம் போல நடைப் பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் இருந்தது. இருப்பினும் வேறு பிரச்சினை இல்லை. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிகளில் திட்டமிட்டபடி கலந்து கொள்ளவும் முடிவெடுத்தார் முதல்வர்.
அதன்படி காலையில் அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் கொளத்தூரில், கபாலீசுவரர் கல்லூரி விழாவில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார் முதல்வர். இருப்பினும் அவருக்கு உடல் நலப் பரிசோதனைகளை செய்து பார்க்க முடிவெடுத்ததால் அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் சென்றார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாலும் உடல் நலப் பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் தற்போது முதல்வருக்கு ஓய்வு பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் உடல் நிலை சரியானதும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிகிறது. முதல்வர் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
ஐங்கரன் (நெடுங்கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
{{comments.comment}}