சென்னை: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் இன்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என முதல்வர் மு க ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஆளுநர் வழக்கில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 இன் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அந்தஸ்தை பயன்படுத்தி குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கதக்கது என முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
அவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். சற்று முன்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நமது தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இந்த சட்டமன்ற பேரவையில் நாம் நிறைவேற்றி மாண்புமிகு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த பல முக்கிய சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். அந்த நிலையில் அவற்றை நாம் மீண்டும் இங்கே நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். இரண்டாவது முறை சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டம் முன் வடிவுகளுக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என அரசியல் சட்டம் வரையறுத்து இருந்த போதிலும் இவற்றிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததோடு அதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில் தமிழ்நாடு அரசின் வாதத்தில் இருந்து நியாயத்தை ஏற்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்டம் முன் வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் எனவும் தெரிவித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் இன்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயரிய கொள்கையான மாநில சுயாட்சி மத்திய கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலை நாட்ட தமிழ்நாடு அரசு போராடுகிறது. தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் எனக் கூறியுள்ளார்.
திக தலைவர் கி.வீரமணி:
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் சட்டத்தில் விரோதமாக செயல்பட்டு வந்த ஆர்.என் ரவி ஆளுநராக நீடிக்க கூடாது. தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு சரியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனக்கு இல்லாத வீட்டோ அதிகாரம் இருப்பதாக எண்ணி ஆளுநர் ரவி செயல்பட்டு வந்தார் என தி.க தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
தங்கம் விலை நேற்று மட்டுமில்லங்க இன்றும் குறைவு தான்... அதுவும் சவரன் ரூ. 400 குறைவு!
கேரளாவில் பரவும் மூளையை உண்ணும் அமீபா நோய்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 18, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}