புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!

Jul 10, 2025,05:02 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் ஏற்பட்ட மோதலால் மன வருத்தத்தில் இருந்த முதல்வர் என். ரங்கசாமியை பாஜக தலைவர்கள் நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர் சமாதானமடைந்துள்ளார்.


இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுச்சேரியில் எந்த ஆட்சி இருந்தாலும், எந்த ஆளுநர் வந்தாலும் நிர்வாகத்தில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும், மாநில அந்தஸ்து பெரும் வரை இது போன்ற பிரச்சினைகள் வர தான் செய்யும். வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று புதுச்சேரியில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார் என். ரங்கசாமி.


புதுச்சேரி யூனியன் பிரதேச சுகாதாரத்துறை இயக்குனர் நியமன விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தான் பரிந்துரைத்த நபரை நிராகரித்துவிட்டு துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக நியமனம் செய்ததாக முதலமைச்சர் ரங்கசாமி கடந்த மூன்று நாட்களாக சட்டப்பேரவைக்கு வரவில்லை. இதனால் அவரை சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சமாதானம் செய்ய முயற்சித்தும் முதலமைச்சர் அதனை ஏற்கவில்லை.




இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமியை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்தில் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி சமாதானம் அடைந்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் ரங்கசாமி. அப்போது அவர் கூறுகையில், எங்களது சந்திப்பு வழக்கமான சந்திப்பு. இந்த அரசு 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து வெற்றிப்பெற்றது போல வரும் 2026ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி  ஆட்சியமைக்கும்.


புதுச்சேரி நிர்வாகத்தை பொறுத்தவரை ஆட்சியாளர்களுக்கும் ஆளுநருக்கும் சிறு, சிறு பிரச்னைகள் வழக்கமானது. இதனை நாங்கள் சரி செய்து கொள்வோம். ஒட்டுமொத்த  நிர்வாகத்தில் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொண்டால் 2026ம் வெற்றி பெறலாம் என ஆலோசனை செய்தோம். எந்த அரசாக இருந்தாலும் மாநில அந்தஸ்து பெறுகின்ற வரை இது போன்ற பிரச்சனைகள் வரும். இந்த ஆட்சி இல்லை, எந்த  ஆட்சி இருந்தாலும் எந்த ஆளுநர் வந்தாலும் நிர்வாகத்தில்  பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் அதனை சரி செய்வோம், இப்பவும் சரி செய்வோம். 


தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு  குறித்து பேசி முடிவெடுத்துக்கொள்வோம். பாஜக கட்சி மூலம் எனக்கு எந்த அழுத்தம்  கொடுக்கவில்லை. பிரதமருடன் நல்ல நெருக்கமும், நட்புடன் இருக்கிறேன். இந்த நட்பானது  இப்போது அல்ல,  நான் காங்கிரசில் முதலமைச்சராக இருக்கும் போது முதலமைச்சர்கள் கூட்டத்தில் சந்தித்து பேசியுள்ளேன் என்றார் அவர்.


பாஜகவிடம் சிக்கித் தவிக்கிறேனா?


பாஜக கூட்டணியை விட்டு வெளியே வர முடியாமல்  தவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ரங்கசாமி எங்களுக்கு அது போன்ற சூழ்நிலை கிடையாது. மக்களுக்கு கடமை ஆற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. மக்கள் எங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதை நாங்கள் சரியாக செய்வோம். 


மசோதாக்கள் சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய உள்ளதால் சிறப்பு சட்டமன்றம் கூட்ட வேண்டும் என்று சபாநாயகரிடம் எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் உள்ள அனைத்து கட்சி சார்ந்தவர்களும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக மாநில அந்தஸ்து அவசியம் என  இப்போது அல்ல, எப்போதும் தொடர்ந்து வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.


முதலமைச்சரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, தேசிய ஜனநாயக கூட்டணியின் புதுச்சேரி முதலமைச்சரை சந்திப்பதற்காக புதுச்சேரி வந்துள்ளேன். 2026 தேர்தலுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என ஆலோசனை செய்தோம்.  தாழ்த்தப்பட்டவர் விவகாரத்தில் தீப்பாய்ந்தானை நியமன சட்டமன்ற உறுப்பினராக நியமித்துள்ளோம்.


சில சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் அதனை சரி செய்து கொள்வோம்.  எங்களுக்கு 2026 தேர்தல் தான் இலக்கு தேர்தல் நேரத்தில் வேறு கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் அதைப் பற்றி நாங்கள் அப்போது யோசிப்போம்.  தேர்தல் நெருக்கத்தில் தான் யாருக்கு எத்தனை சீட் என்பதை முடிவு செய்வோம்.


ஒரு கட்சி என்றால் சின்ன சின்ன பிரச்சனைகள் எப்போதும் வர தான் செய்யும் அதனை ஆலோசனை செய்வோம். புதிய அமைச்சரை நியமிக்க முதலமைச்சர் பரிந்துரை செய்துள்ளார். மூன்று நான்கு நாட்களில் புதிய பாஜக அமைச்சர் பதவி ஏற்பார் என தெரிவித்தார். 


புதுச்சேரி அமைச்சரவையில் அமைச்சராக இருந்து வந்த பாஜகவின் சாய் சரவண குமார் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது இடத்தில் ஜான் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!

news

புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!

news

மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்

news

அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு

news

புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்