திருவண்ணாமலை பாறை சரிவு சோகம்.. 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Dec 03, 2024,10:46 AM IST

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கிய உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தையே உலுக்கி விட்டது. இதன் தாக்கத்தால் திருவண்ணாமலையில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக வ உ சி நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. அதாவது அண்ணாமலையார் கோவிலின் தீபமேற்றும் பகுதியில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தது. இதில் மலை அடிவாரத்தில் இருந்த இரண்டு வீடுகள் மீது 40 டன் எடை கொண்ட பாறைகள் விழுந்து, வீடுகளை மண் குவியலால் மூடியது.

இந்த இடிப்பாட்டிற்குள் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, இரண்டு குழந்தைகள் மற்றும்  அருகில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் என மொத்தம் ஏழு பேர் மண்ணில் புதையுண்டனர். இதனையடுத்து பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிகளுக்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இடைவிடாத  மழையால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து போராடிய மீட்பு குழுவினர் நேற்று இரவு வாக்கில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் 4 பேரின் உடல்கள் முழுமையாக கிடைத்த நிலையில் மற்ற மூவரின் உடல்கள் சிதைந்த நிலையில் பாதியாகவே கிடைத்ததாக கூறப்படுகிறது. 



இதையடுத்து முழுமையாக அவர்களது உடல் பாகங்களை மீட்க வேண்டும் என்று குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் அந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன. 

இதனிடையே சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மண்ணில் புதையுண்டவர்களை உயிருடன் மீட்க போராடினோம். ஆனால் மழை குறுக்கிட்டதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது‌. இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர் என கூறினார்.

திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!

news

கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!

news

என்னுள் எழுந்த (தீ)!

news

144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்