சென்னை: நெல்லை தொகுதியில் தோற்றால் திமுக நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதானல் அனைத்து கட்சிகளும் தத்தமது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், திமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உடன் பிறப்பே வா என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு தொகுதியாக திமுக நிர்வாகிகளுடன் சந்தித்து பேசி வருகிறார்.

இதுவரைக்கும் 33 நாட்களில் 73 சட்டசபைத் தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நேரடியாக ஆலோசனை நடத்தி முடித்திருக்கிறார். இந்த கூட்டத்தின் போது அந்தந்த தொகுதிகளின் நிலவரம் என்ன?. அரசு திட்டங்கள் அவர்களுக்கு சேர்கின்றதா? இல்லையா? உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், நெல்லை சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
அப்போது, 2026 நெல்லை தொகுதியில் தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைவரது பதவிகளும் பறிக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி
இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்
சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு
அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!
இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)
{{comments.comment}}