சென்னை: டெல்லியில் வரும் மே 24ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக 23ஆம் தேதி இரவு டெல்லி இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். அதாவது பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, பாஜக தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு நிதி ஆயோக் குழுவை உருவாக்கியது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.

இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் வரும் மே 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் டெல்லியில் வரும் மே 24ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக மே 23ஆம் தேதி இரவு முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஆந்திரா, பிஹார் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்திற்கு
நிதி ஒதுக்கவில்லை என முதல்வர் மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}