வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 3. லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அவர் பிரமாண்ட வெற்றியைப் பெறுகிறார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஒருவர் ஒரு தொகுதியில் தான் பதவி வகிக்க முடியும் என்ற அடிப்படையில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவித்தனர்.
நவம்பர் 13ஆம் தேதி வயநாடு மக்களவை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் , கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் சத்யன் மெகோரி மற்றும் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 17 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம் கண்டனர்.
வயநாடு தொகுதியில் இன்று காலை 8:00 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அவர் 4,81,550 வாக்குகளைப் பெற்று கிட்டத்தட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் உள்ளார். 3வது இடத்தில்தான் பாஜக வேட்பாளர் இருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே அரசியல் செய்து வந்தவரான பிரியங்கா காந்தி அங்கு ஒரு தேர்தலில் கூட போட்டியிட்டதில்லை. தனது குடும்பத்தினருக்காகவும், கட்சியினருக்காகவும் தீவிரப் பிரச்சாரம் மட்டுமே செய்துள்ளார். முதல் முறையாக அவர் தேர்தலில் இப்போதுதான் போட்டியிட்டார். முதல் தேர்தலிலேயே பிரமாண்ட வெற்றியை அவர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}