சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் போட்டியிட வேண்டும் என காங்கிஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசி உள்ளது திமுக தலைமைக்கு தலைவலியை மட்டுமல்ல, கூட்டணியில் கலகத்தையும் ஆரம்பித்து வைத்துள்ளது.
காங்கிரசிற்கு 125 சீட்டா?
திருநெல்வேலியில் சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் 125 இடங்களில் போட்டியிடும் என்றார். அதே கூட்டத்தில் பேசிய சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் துணை இல்லாமல் எந்த கொம்பாதி கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.
இவர்களின் இந்த பேச்சு, திமுக தலைமைக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ராஜேஷ்குமார் பேசியது போல, தமிழகத்தில் தற்போது வரை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தான் திமுக ஒவ்வொரு முறையும் ஆட்சி அமைத்துள்ளது. திமுக தனித்து நின்ற ஒரு சில தேர்தல்களில் படுதோல்வியையே சந்தித்துள்ளது.
திமுக.,விற்கு நெருக்கடி தரும் காங்கிரஸ் :
இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தங்களால் வெற்றி பெறவோ, ஆட்சி அமைக்கவோ முடியாது என திமுக தலைமைக்கு நன்றாக தெரியும். அதனால் தான் கூட்டணியை பலமாக வைத்திருப்பதிலும், கூட்டணி கட்சிகள் எந்த நிலையிலும் வெளியேறி விடாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக திமுக பார்த்து வருகிறது. இந்த முறை தமிழக அரசியலில் விஜய்யின் வருகை, காங்கிரசிற்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான் தங்களின் பலத்தையும், முக்கியத்துவத்தையும் திமுக தலைமைக்கு உணர்த்த அக்கட்சி தலைவர்கள் இதை பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதுவும் காங்கிரஸ் மேலிடத்தின் ஒப்புதலுடன் தான் 125 சீட் வேண்டும் என்பதை மறைமுக கேட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.
திமுக.,வின் திட்டம் இது தான் :
ஆரம்ப காலத்தில் திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 100 சீட்கள் வரை கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் காங்கிரசின் ஓட்டு வங்கி தமிழகத்தில் சுருங்குவதை தெரிந்து கொண்டதாலும், அதிக கட்சிகளை கூட்டணியில் இணைப்பதற்காக காங்கிரசிற்கு ஒதுக்கப்படும் சீட்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல குறைத்து 2021 சட்டசபை தேர்தலில் 25 என சுருக்கி விட்டது திமுக. இந்த முறை பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க திமுக முயற்சி செய்து வருவதால் காங்கிரசிற்கு ஒதுக்கப்படும் சீட்களை மேலும் குறைக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, காங்கிரசின் கோட்டையாக இருக்கும் பல தொகுதிகளை இந்த முறை திமுக., தங்கள் வசம் வைத்துக் கொண்டு, மற்ற தொகுதிகளையே காங்கிரசிற்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளதாம்.
விஜய்யை குறிவைக்கும் காங்கிரஸ் :
இதை தெரிந்து கொண்ட காங்கிரஸ், தவெக கூட்டணிக்கு செல்வது குறித்து பல மாதங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தையை துவக்கி, ரகசியமாக நடத்தி வருகிறது. கூட்டணி பேச்சுக்கான ஆரம்பம் தான் மல்லிகார்ஜூன கார்கே விஜய்யிடம் பேசியதும், ராகுல் காந்தி கைதுக்கு முதல் ஆளாக விஜய் கண்டனம் தெரிவித்ததும். கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால், மற்ற கட்சிகளும் ஒவ்வொன்றாக விலகி விடும் என்பதால் அவர்களை சமாதானப்படுத்தி, கூட்டணியில் தக்க வைப்பதற்கான முயற்சிகளை ஒரு புறமும், தவெக-காங்கிரஸ் கூட்டணி அமைந்து விடாமல் இருப்பதற்கான வேலைகளை மறுபுறம் திமுக செய்து வருகிறதாம்.
காங்கிரசின் ஃபர்ஸ்ட் சாய்ஸ்:
2024 தேர்தலில் அதிமுக தனித்து நின்றதால், இந்த முறை அவர்களுடன் கூட்டணி வைக்க தான் காங்கிரஸ் முதலில் நினைத்ததாம். அதற்கான முயற்சிகளை துவக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கையில் தான் யாரும் எதிர்பாராமல் பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் இணைந்து விட்டது. இதனால் தனித்து போட்டிக்கு வாய்ப்பு இல்லை என்பதால் இந்த முறை தவெக உடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறதாம். திமுக.,விற்கு மறைமுக அழுத்தம் கொடுக்க தான், வெளிப்படையாக அக்கட்சி தலைவர்கள் 125 சீட்களில் போட்டி என பேசி உள்ளார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, 125 தொகுதிகளை தேர்வு செய்து பலம், பலவீனங்களை ஆராய்ந்து, 50 இடங்களில் போட்டியிட திமுக தலைமையிடம் கேட்க உள்ளதாக சமாளித்துள்ளார்.
திமுக.,விற்கு தலைவலி ஆரம்பம் :
125 ஓ, 50 ஓ...எப்படி பார்த்தாலும் இந்த முறை காங்கிரசிற்கு கூடுதல் சீட் தந்தே தீர வேண்டும் என்பதில் அக்கட்சி விடாபிடியாக உள்ளது. இதனால் மற்ற கூட்டணி கட்சிகளும் தங்களுக்கும் கூடுதல் சீட்களை கேட்டு மல்லுகட்ட தயாராகி விட்டன. இருக்கும் கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுத்தால் புதிதாக வரும் கட்சிகளுக்கு என்ன தருவது? அது மட்டுமில்லாமல், திமுக போட்டியிடும் சீட் குறையவும் வாய்ப்புள்ளது. அப்படி குறைத்தால் திமுக மீண்டும் கூட்டணிகளை நம்பியே ஆட்சி நடத்த முடியும் என்ற நிலை ஏற்படும். 50 முதல் 125 சீட் கொடுத்தால் கூட்டணி, இல்லை என்றால் குட் பை என திமுக.,விடம் சொல்லாமல் சொல்லி விட்டது காங்கிரஸ். இனி திமுக இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!
பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி
125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்
சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்
இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!
திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு
{{comments.comment}}