- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: அசைவக் குழம்பு வகைகளிலேயே ராயலானது மட்டன் குழம்புதான். அப்படிப்பட்ட யேமட்டன் குழம்புக்கே டஃப் கொடுக்கிறதுன்னா அது எப்படி இருக்கணும்.. அதை விட வேற லெவல்ல இருக்கணும் இல்லையா.. அப்படிப்பட்ட ஒரு குழம்பைத்தான் இப்பப் பார்க்கப் போறோம்.. ஆனால் இது சுத்தமான அதேசமயம் சூப்பரான சைவக் குழம்புங்க.. அதான் மேட்டரே!
தை மாதம் என்றாலே தரையெல்லாம் நடுங்கும் என்பார்கள். இந்த குளிரான மாதத்தில் சூடான மல்லிகைப்பூ இட்லிக்கு பட்டன் காளான் பட்டாணி குழம்பு வைத்து சாப்பிட அருமையாக இருக்கும். அதைத்தான் இப்ப இங்க பார்க்கப் போறோம்.. வாங்க பிரண்ட்ஸ் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

பட்டன் காளான் - ஒரு பாக்கெட்
பச்சை பட்டாணி - ஒரு கப்
தேங்காய் துருவியது - 3 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
சீரகம் சோம்பு - தலா ஒரு ஸ்பூன்
வர மிளகாய் - 2
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
பட்டை லவங்க பூ - தலா நான்கு
வெங்காயம் தக்காளி - தலா ஒன்று கட் செய்யவும்
கறிவேப்பிலை மல்லித்தழை - ஒரு கைப்பிடி
மிளகு - ஒரு ஸ்பூன்
கடலை எண்ணெய் - ஒரு ஸ்பூன்
கடுகு தாளிக்க - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு காரம் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து பட்டை லவங்கம் சோம்பு, பட்டாணி போடவும்.
2. காளான் சுத்தம் செய்து வெதுவெதுப்பான நீரில் உப்பு மஞ்சள் தூள் போட்டு கழுவிக் கொள்ளவும் பிறகு கட் செய்யவும்.
3. குக்கரில் கட் செய்த வெங்காயம் காளான் இஞ்சி பூண்டு விழுது போடவும்
4. மிக்ஸியில் போட வேண்டியவை - தேங்காய் சீரகம், மிளகு, தக்காளி சிறிது கருவேப்பிலை மல்லித்தழை மஞ்சள் மல்லித்தூள் உப்பு தேவைக்கு நன்றாக அரைக்கவும்.
5. அரைத்த விழுதை காளான் குக்கரில் சேர்க்கவும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் உப்பு ஊற்றவும். உப்பு காரம் பார்த்துவிட்டு குக்கர் மூடி போட்டு இரண்டு விசில் விடவும்.
6. பிரஷர் அடங்கியதும் குக்கர் திறந்து சிறிது கொதிக்க விடவும் மல்லித்தழை போட்டு சூடான இட்லியுடன் பரிமாறவும்.
காளான் நன்மைகள்
காளான் நிறைய நன்மைகளை உள்ளடக்கியது. அதை சாப்பிடும்போது ஏகப்பட்ட பலன்களையும் நாம் பெறுகிறோம்.. என்னென்ன சத்து இருக்கு தெரியுமா?
1. வைட்டமின் சி பி டி நுண்ணூட்டச் சத்துக்கள் நார்ச்சத்து செலினியம் அதிகம் உள்ளது
2. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
3. முதுமையை குறைக்கிறது
4. வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
5. இதய ஆரோக்கியம் மேம்படுகிறது
6. தாமிரம் பொட்டாசியம் பாஸ்பரஸ் ஆக்சிஜனேற்றிகள் அதிகம்
7. வேலைக்கு செல்பவர்கள் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் பேக் செய்ய அருமையான குழம்பு
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}