டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171 வது படமாக உலகம் முழுவதும் இன்று ரிலீசாகி உள்ளது கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நாகர்ஜூனா, செளபின் ஷாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமிர்கான் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் இது. இந்த படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் மனதை கவர்ந்ததா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சைமன் சேவியர் துறைமுகத்தில் மிகப் பெரிய தங்க வாட்ச் கடத்தல் தொழில் செய்து வருகிறார். அவருக்கு துணையாக இருக்கிறார் தயாளும், அவரது ஆட்களும். கடத்தல் சாம்ராட்டாக இருக்கும் சைமனின் மகன் அர்ஜூன், தனது தந்தையின் கடத்தல் தொழில் பிடிக்காமல், படித்து சுங்கத்துறை அதிகாரியாக மாறுகிறார். இந்த சமயத்தில் சைமனை ஆதாரங்களுடன் பிடிப்பதற்காக போலீஸ் அதிகாரி ஒருவர் துறைமுக கூலியாக மாறுவேடத்தில் செல்கிறார். ஆனால் அவரை கண்டுபிடித்து தயாள் கொன்று விடுகிறார். இருந்தாலும் மற்றொரு அதிகாரியும் கூலிகளில் ஒருவராக இருப்பதாகவும், அவர் யார் என்பதை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு ரூ.2 கோடி பரிசு வழங்குவதாகவும் அறிவிக்கிறார்.
அதே சமயம் தேவா என்ற தேவராஜ், புகைபிடித்தல் மற்றும் குடி ஆகியவை தடை செய்யப்பட்ட மேன்சன் ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு அவர் துறைமுக கூலியாகவும் இருந்து வருகிறார். சைமனின் கடத்தல் கும்பல் செய்யும் கடத்தல் தொழிலை எப்படி ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கிறார் என்பதை தான் ஆக்ஷன், த்ரில்லர், எமோஷனல் கலந்து சொல்லி இருக்கும் படம் தான் கூலி. இதில் தேவாவாக ரஜினியும், சைமனாக நாகர்ஜூனாவும் நடித்துள்ளனர்.
படம் எப்படி இருக்கு?
ஃபர்ஸ்ட் ஆஃப்பில் ரஜினியின் காமெடி, deaging முறையில் இளமை கால ரஜினியின் தோற்றம் ஆகியவை ரசிக்கும் படியாக உள்ளது. இருந்தாலும் இது வழக்கமான லோகேஷ் கனகராஜ் படம் போல் இல்லாமல் ரஜினியை முன்னிலைப்படுத்தும் படமாக மட்டுமே உள்ளது என்பது தான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனால் ஆங்காங்கே குழப்பம் தெரிகிறது.
ஃபர்ஸ்ட் ஆஃப் நீண்ட நேரம் கதையை இழுப்பது போல் கொஞ்சம் போராக தான் உள்ளது. இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாக செல்கிறது. கடைசி 20 நிமிடங்கள், குறிப்பாக க்ளைமாக்ஸ் மாஸாக உள்ளது. ரசிகர்களை மிகவும் கவரும் விதமாக சண்டை, த்ரில்லிங் காட்சிகள் உள்ளது.
படத்தின் மைனஸ் :
திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக லோகேஷ் கனகராஜ் அமைத்திருக்கலாம். பல காட்சிகளை சுருக்கமாக வைத்திருக்கலாம். வழவழா என்று போவதைத் தவிர்த்திருக்கலாம்.
படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களின் கதாபாத்திரத்தை மிக அற்புதமாக செய்திருந்தாலும் அவர்களின் கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் இன்னும் சிறப்பாக, அழுத்தமாக காட்டி இருக்கலாம்.
அனிருத்தின் இசை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. சத்தம்தான் அதிகமாக இருக்கிறது.. இசையைக் காணோம். வழக்கமாக லோகேஷ் கனகராஜ், அனிருத் படங்களுக்கு ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு அபரிமிதமாக இருந்தாலும், ஏமாற்றமே கிடைத்துள்ளது.
படத்தின் பிளஸ் :
நடிகர்களின் நடிப்பு, செகண்ட் ஆஃப்பில் வரும் விறுவிறுப்பான காட்சிகள், சண்டை காட்சிகள் ஆகியவை படத்திற்கு ப்ளசாக அமைந்துள்ளது. ரஜினியின் நடிப்பு, காமெடி, இளமை கால ரஜினி வரும் காட்சிகள் ஆகியவை படத்திற்கு மிகப் பெரிய ப்ளசாக உள்ளது.
ரஜினிகாந்த்துக்கு இது திரையுலகில் பொன் விழாவாகும். இதனால் ரசிகர்கள் கூலியை மிகப் பெரிய அளவில் கொண்டாடக் காத்திருந்தனர். ஆனால் இப்படம் முழுமையான ரஜினி படமாகவும் இல்லை, லோகேஷ் கனகராஜ் படமாகவும் இல்லை என்று தகவல்கள் பரவி வருவது அவர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!
சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
{{comments.comment}}