சென்னை: ஏஆர் ரஹ்மான் மீது தொடரப்பட்ட பதிப்புரிமை வழக்கில் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் இசையமைத்தவர் ஏஆர் ரஹ்மான். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு ரிலிஸ் ஆனது. இந்த படத்தின் கதை கல்கி எழுதிய வரலாற்று நாவலான பென்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதன் இரண்டாம் பாகம் 2023 ம் ஆண்டு ரிலிஸ் ஆனது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உள்ள வீர ராஜா வீரா பாடல் தனது தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் இயற்றிய சிவா ஸ்துதி என்ற பாடல் என்று இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் கடந்த 2023ம் ஆண்டு ரஹ்மானுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பொன்னியின் செல்வன் படத்தின் வீரா ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதன் காரணமாக ரூ. 2 கோடி தொகையை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலவலகத்தில் செலுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}