சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இன்க் எனும் நிறுவனம் ஆப்பிள் ஐபோனுக்கு பாதுகாப்பு கண்ணாடிகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
பாக்ஸ்கான், பெகாட்ரன், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தற்பொழுது சென்னையில் இயங்கி வருகிறது. இந்த வரிசையில் இப்போது கார்னிங் இன்க் நிறுவனமும் சென்னையில் தனது பிசினஸைத் தொடங்குகிறது. ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் டிஸ்பிளே கிளாஸ் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம்தான், கார்னிங் இன்க்.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 1000 கோடி முதலீட்டில் இந்த நிறுவனம் தனது கொரில்லா கண்ணாடி தயாரிக்கும் ஆலையை நிறுவுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிள்ளைப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தில் இந்த தொழிற்சாலை அமையவிருக்கிறது. இந்த தொழிற்சாலை மூலமாக முதற்கட்டமாக 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிறுவனம் முதலில் தெலுங்கானாவில் தான் அமையவிருந்தது. ஆனால் மின்னணு பொருட்கள் உற்பத்திக்கான சூழல் தமிழகத்தில் பிரமாதமாக இருப்பதால் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்க திட்டமிட்டு இங்கு வந்துள்ளனர்.
இந்த நிறுவனம் தயாரிக்கும் கண்ணாடிகள் ஆப்பிள், ஐபோன், ஐபாடுகளுக்கு பாதுகாப்பு அம்சமாக திகழ்கிறது. இந்த கண்ணாடிகள் கீழே போட்டாலும் போனுக்கு எந்த ஆபத்து ஏற்படுத்தாதாம். இந்த நிறுவனம் கண்ணாடி மட்டுமல்லாமல் பீங்கான்களையும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}