டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது கொரோனா வைரஸ். முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் கோர தாண்டவத்தில் பல உயிர்கள் பறி போகின. ஊரங்கு உத்தரவுகள், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதற்கு அடுத்த படியாக தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் மட்டும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு லேசான பாதிப்பு தான் இருப்பதாகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 34 பேருக்கம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் 69 பேருக்கும், மஹாராஷ்டிராவில் 44 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}