சிறையில் ஊழல்.. கைதிகள் உயிரிழப்பு.. விசாரணை கோரும் அன்புமணி ராமதாஸ்

Oct 19, 2023,05:56 PM IST

சென்னை: சென்னை புழல் சிறை ஊழல்கள் நிறைந்து காணப்படுகிறது. கையூட்டு தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழந்து வருகின்றனர் என பாமக தலைவர் டாக்டர்  அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உண்மையாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும்  அல்லது சிறைவாழ்க்கை கொடுமைகளில் இருந்து  விடுபடுவதற்கு நினைத்தாலும்  சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்காக பரிந்துரைக்க 50,000 ரூபாய் கையூட்டு தர வேண்டுமாம். 




உள்நோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்கு பரிந்துரைக்க ரூ. 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலும் அங்குள்ள மருத்துவக் குழுவினரால் கையூட்டாக வசூலிக்கப்படுகிறது என்று  ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கையூட்டு தருவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத கைதிகள் உண்மையாகவே கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு சிறைக்கு வெளியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் கிடைக்காது. கையூட்டு தர வழியில்லாததால், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த பல கைதிகள், சரியான நேரத்தில்  உரிய மருத்துவம் கிடைக்காமல் உயிரிழந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பது கூடுதல் வேதனையளிக்கிறது. 


சிறைகளில் தேவைப்படுவோருக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ வசதி கையூட்டு தராததால் மறுக்கப்படுவதும், கையூட்டு கொடுப்பதால் மருத்துவமே தேவைப்படாத பலர் வெளி மருத்துவமனைக்கு சென்று அனைத்து வசதிகளுடன் தங்கியிருப்பதும் சட்டத்தையும், அறத்தையும் கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும்.


சிறைகளில் கைதிகளை மனு போட்டு பார்ப்பதில் தொடங்கி, தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக  பெறுவது வரை அனைத்திலும்  கையூட்டு தலைவிரித்தாடுகிறது என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்தது தான். ஆனால்,  உயிர்காக்கும் மருத்துவம் அளிப்பதைக் கூட  கையூட்டு தான் தீர்மானிக்கிறது என்பதையும்,  கையூட்டு தருவதற்கு வசதி இல்லை என்பதாலேயே  வாழ வேண்டிய பலர் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதையும்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலகில் இதை விட கொடிய மனித உரிமை மீறல் இருக்க முடியாது. இது கண்டிக்கத்தக்கது.


புழல் மத்திய சிறையில்  கையூட்டு தர மறுத்ததால், மருத்துவ வசதி மறுக்கப்பட்டு  உயிரிழந்தவர்கள் எவ்வளவு பேர்?  வெளி மருத்துவமனைகளில் மருத்துவம் பெறுவதற்காக பரிந்துரைக்க கையூட்டு வசூலிக்கும் வழக்கம் எவ்வளவு காலமாக உள்ளது? இந்த நடைமுறையால் சட்டவிரோதமாக பயனடைந்தவர்கள் எவ்வளவு பேர்? என்பது குறித்து  விரிவான விசாரணை நடத்த தமிழக  அரசு ஆணையிட வேண்டும். மருத்துவம் கிடைக்காமல் உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவும்  தமிழக அரசு முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. முன்மதியையும் தற்காப்பையும் உமதாக்குவதில் உறுதியாய் இருங்கள்

news

செப்டம்பர் 8 வரை சட்டமன்றக் கூட்டம் : சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு

news

பட்ஜெட் பூஜ்ஜியம்...மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

news

பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை...ஸ்டிக்கர் ஒட்டும் அரசு : எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்

news

தமிழக பட்ஜெ ட் 2026 : தவெக அரசால் பெயர் மாற்றப்பட்ட 2 திட்டங்கள்

news

சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா

news

திருநாவுக்கரசரை அசைத்துக் கூட பார்க்க முடியாத கொடும் விஷம்

news

முதல்வர் விஜயின் முதல் பட்ஜெட்.. சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்

news

காலை காபியும் காதலும்

அதிகம் பார்க்கும் செய்திகள்