சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் (தனி) தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் முதல் ஆளாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை முடித்து விட்டது. தற்போது தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக ஏற்கனவே சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்திருந்தது. இரண்டு தொகுதிகள் என எண்ணிக்கையில் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிக்கு எந்த தொகுதி என்பதில் இறுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியிட்ட கோவை தொகுதி இந்த முறை திமுகவுக்கு போய் விட்டது. அதற்கு் பதில், திமுக வென்ற திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட்க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இறுதியாக இன்று காலை முதலமைச்சர் மு க ஸ்டாலினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நானும் சேர்ந்து ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் ஒன்று மதுரை, இரண்டாவது திண்டுக்கல் என்கிற இரண்டு தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
நிச்சயமாக இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பது மட்டுமல்ல தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்த அணி மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் (தனி) தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த தேர்தலிலும் இதே தொகுதிகளில் தான் கம்யூனிஸ்ட் போட்டியிட்டது என்பது நினைவிருக்கலாம்.
பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி
நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த திட்டம்...நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்
பாஜக.,வின் உருட்டல்...மிரட்டலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் : முதல்வர் பேச்சு
பாகிஸ்தான் புதிய ஏவுகணை சோதனை...எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்
மதுரையில் ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு!
பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது இந்தியா
தமிழக மீனவர்களின் மீது.. இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல்.. மீனவர்கள் போராட்டம்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!