நாகப்பட்டனம்: வங்கக் கடலில் புயல் உருவாகி வருவதால், நாகப்பட்டனம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இது இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் காரணத்தினால் அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர்,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஆகிய 10 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அந்தப் பக்கம் போகாதீங்க.. AM I SCARED"?
மெல்ல தடதடக்கும் மனிதநேயத்தின் இதயத் துடிப்பு.. Humanity!
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
ஒவ்வொரு துணியும்.. ஒவ்வொரு மாணவ மணியாய்.. !
பனி படர்ந்த தாடியுடன் ஒரு முதுபெரும் ஞானி.. Santa's Celestial Chariot: A Yuletide Overture!
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
யோகிகளின் வாழ்க்கை தத்துவம் (Jesus Consciousness)
கற்க, விளையாட.. கனவு காணவும் உரிமை உண்டு.. Children’s Rights!
{{comments.comment}}