நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் விடாமல் வெளுக்கும் மழை

Nov 30, 2024,08:59 AM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை தொடங்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் என பல மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை கொட்டிக் கொண்டுள்ளது.


வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது தற்போது மணிக்கு 12 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அது புதுச்சேரிக்கு 150 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 140 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. 




இதன் எதிரொலியாக கடலோரத் தமிழ்நாட்டில் திருவள்ளூர் தொடங்கி விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கன மழை கொட்டி வருகிறது. இரவிலிருந்து விட்டு விட்டு பெய்து வந்த மழை தற்போது அடை மழையாக மாறி கொட்டித் தீர்க்கிறது. சென்னை மற்றும் புறநகர்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கூடவே பலத்த காற்றும் வீசி வருகிறது.


தற்போது மேகக் கூட்டங்கள் சென்னை கடற்கரைக்கு மேலாக அதிக அளவில் வியாபித்து வருவதால் மழை போகப் போக மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. மழை, புயலை சமாளிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவையில்லாமல் வெளியில் போக வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 9 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகல் வாக்கில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிகிறது. புதுச்சேரியில் தற்போது பேய்க்காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்