சென்னை : சென்னைக்கு அருகே வங்கக் கடலில் பகுதியில் உருவாகி இருந்த அடர்ந்த காற்றழுத்த பகுதியானது புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை மக்கள் உஷாராக இருக்கும் படி தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
சென்னைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருந்த அடர்ந்த காற்றழுத்த பகுதி இன்று (டிசம்பர் 03) புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு மிச்சாங் (உச்சரிப்பில் மிக்ஜாம்) என மியான்மர் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த புயல் சென்னைக்கு மிக அருகே நெருங்கி வந்து ஆந்திராவின் கடலோர பகுதிகளை தொட்டுச் சென்று, கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களான கடலூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் அளித்துள்ள பேட்டியில், புயலின் பாதையில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. புயல் சின்னமானது சென்னைக்கு மிக அருகில் உள்ளது. அடர்ந்த மேகங்கள் சூழ்திருக்கும். இதனால் நாள் முழுவதும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. சென்னை, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மிக மிக கனமழை முதல் அதீத கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இப்போதே மழை துவங்கி விட்டது. இது போன்ற எச்சரிக்கைகளை நான் வழங்குவது மிக அரிதான ஒன்று.
2015 ம் ஆண்டு நவம்பர் 15,16, டிசம்பர் 1,2, 2016 ம் ஆண்டு டிசம்பர் 11,12 பெய்த மழையை போல் இந்த ஆண்டு டிசம்பர் 3, 4 ஆகிய நாட்களில் மிக மிக கனமழை பெய்யும். அதிலும் டிசம்பர் 3 ம் தேதி இரவு முதல் 4 ம் தேதி இரவு வரை மிக முக்கியமான காலம் என்பதால் இந்த சமயத்தில் மிக அதிக மழையை எதிர்பார்க்கலாம். அதற்காக 2015 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை போல் ஏற்படும் என அர்த்தம் கிடையாது. பொதுவாக புயல் என்றால் 100 மி.மீ., வரை மழை பெய்யும். ஆனால் தற்போது 200 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாரும் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். டிசம்பர் 3 ம் தேதி இரவு முதல் 4 ம் தேதி இரவு வரை இடை விடாது அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் கவனமாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}