உங்கள் கார் தண்ணீரில் மூழ்கி விட்டதா..  Don't Worry.. டேமேஜ் கிளெய்ம் பண்ணலாம்!

Dec 07, 2023,03:54 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: மிச்சாங் புயல் மழையால் பெரும்பாலான கார்கள், டூவீலர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதை வீடியோவில் பார்த்திருப்போம்.. சரி இப்படிப்பட்ட வாகனங்கள் சேதமடைந்தால் அதை பழுது பார்க்க முடியுமா அல்லது இன்சூரன்ஸ் கிளெய்ம் பண்ண முடியுமா.. நிச்சயம் முடியும்.


கடந்த 2015ம் ஆண்டு வெளுத்தெடுத்த மழையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இதுபோல நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அப்போதுதான் பெருமழைக்காலத்தில் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் குறித்த மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இப்போதும் அதுபோன்ற ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது.


வரலாறு காணாத புயல் மழை காரணமாக சென்னை முழுவதும் நீரால் சூழப்பட்டது . இதனால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. மின்சாரம் இல்லை. தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது பள்ளிக்கரணை.




இப்பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதால் இரண்டு நாட்களாக பெய்த கனமழைக்கு தண்ணீர் இடுப்பளவு உயர்ந்தது. இதனை தவிர்த்து பள்ளிக்கரணை பகுதியில் உள்ள நாராயணபுரம் ஏரி கரை உடைந்து மழை வெள்ளம்  ஆர்ப்பரித்து மள மளவென வந்தது. இங்கு உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் தண்ணீர் ஆக்கிரமித்தது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கும் நிலைமை ஏற்பட்டது.

மேலும் பல்லாவரம்  துரைப்பாக்கம் இடையே உள்ள இணைப்பு சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டது. 


மழை நின்றும் இப்பகுதியில் தற்போது வரை தண்ணீர் வடியாமல் உள்ளதால்  மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து  வருகின்றனர்.ஏரி உடைந்து தண்ணீர் வந்ததால் அடுக்குமாடி  குடியிருப்பில் வசிக்கும் இப்பகுதி மக்களுடைய கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.  இதனால் பல்வேறு கார்கள் தண்ணீருக்குள் மிதந்து  நாசமாகின. பெரும்பாலான கார்கள் அடித்துச் செல்லப்பட்டதால் இதனை சரி செய்ய கார் உரிமையாளர்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர்.


இக்கார்கள் கடந்த நான்கு நாட்களாக மழை நீரூக்குள் மூழ்கி இருப்பதால் இதனுடைய இஞ்சின்கள் முழுவதும் பழுதடைந்தது. இதனால் கார் உரிமையாளர்கள் என்ன செய்வதென்று அறியாமல் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் வாகனம் வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால் இதனை மீட்டு எப்படி இன்சூரன்ஸ் பெற முடியும் என நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள  காரை முதலில் மீட்டு வெளியே கொண்டு வர வேண்டும். அந்தக் காரை எதுவும் செய்யக் கூடாது. திறக்கக் கூடாது. என்ஜின் ஸ்டார்ட் செய்யக் கூடாது.  எந்த நிலையில் அது உள்ளதோ அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


கார் எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் அப்படியே விட்டு விட வேண்டும். அதன் பின்னர் நாம் எந்த நிறுவனத்தில் இன்சூரன்ஸ் எடுத்துள்ளோமோ அந்த நிறுவனத்த அணுகினால், அவர்கள் அடுத்து மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச்  செய்வார்கள். நமக்கு எந்த அளவுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்க வாய்ப்புள்ளதோ அது கிடைக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்