கிரிக்கெட் பந்து தாக்கி ஒருவர் காயம்.. வரலாற்று சிறப்புமிக்க மைதானம் காலவரையின்றி மூடல்!

Jun 28, 2025,05:29 PM IST

லண்டன்: இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் மைதானம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. வாகன நிறுத்தும் இடத்தில் ஒருவரின் காலின் பின்பகுதியில் கிரிக்கெட் பந்து தாக்கியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


டான்பரி கிரிக்கெட் கிளப், ஓக்லாண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் டஸ்கர்ஸ் கிரிக்கெட் கிளப் ஆகிய கிளப்கள் பொதுவாக பயன்படுத்தும் கிரிக்கெட் மைதானம் இங்கிலாந்தில்  டான்பரியில் உள்ளது. டாவ்சன் மெமோரியல் ஃபீல்ட் மைதானம் என்று அழைக்கப்படும் அந்த மைதானத்தைத்தான் தற்போது மூடி விட்டனர்.


கிரிக்கெட் மைதானம் தொடர்பாக சமீபத்தில் நடந்த இரண்டு காரசாரமான கூட்டங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இந்த சீசனின் எஞ்சிய நாட்களில் எந்த கிரிக்கெட் போட்டியும் இங்கு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




மே 17 அன்று, டான்பரி கிரிக்கெட் கிளப், சவுத் வுட்ஹாம் மற்றும் பர்ன்ஹாமின் மூன்றாவது அணிக்கு எதிராக விளையாடியபோது கார் பார்க்கிங்கில் ஒருவர் மீது பந்து பட்டு அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பொது பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாக டான்பரி பாரிஷ் கவுன்சில் கூறியுள்ளதாக 'தி டெலிகிராப்' அறிக்கை தெரிவிக்கிறது.


கடந்த ஒரு வருடத்திற்குள், பொது நடைபாதை வழியாக அருகிலுள்ள வாகன நிறுத்தும் இடத்திற்குள் அடிக்கப்பட்ட கிரிக்கெட் பந்துகளால் குறைந்தது இரண்டு கார் கண்ணாடிகள் உடைந்தன என்பது, வசதிகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு ஆபத்து உள்ளது என்பதைக் குறிக்கிறது. மேலும், பெறப்பட்ட ஆலோசனையை முழுமையாக புறக்கணித்தால், அதன் காப்பீட்டுத் தொகை செல்லாததாகி, சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று கவுன்சில் தெரிவித்துள்ளது.


இந்த மைதானம் கடந்த 50 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது. 18 ஆம் நூற்றாண்டு முதல் இந்த கிராமத்தில் கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தைப் பயன்படுத்தும் மூன்று கிளப்களும் இப்போது டான்பரியில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ள ஒரு ஆடுகளத்திற்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதற்கிடையே டான்பரி கிராமத்தில் கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குமாறு கோரும் மனுவில் கிட்டத்தட்ட 3,000 கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன.


இந்த முடிவு கிளப் அணிகளை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், ன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக டான்பரி சமூக வாழ்க்கையின் ஒரு அங்கமாக பின்னிப்பிணைந்த ஒரு பாரம்பரியத்தை துண்டிக்க வகை செய்யும் என்று அந்த கோரிக்கை மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கருப்புக் கொடி காட்டிய.. பாஜக இளைஞர் அணியினரை அருகே அழைத்து.. மிட்டாய் கொடுத்த ராகுல் காந்தி

news

காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை: மரங்கள் மாநாட்டில் தவெகவை தாக்கி பேசிய சீமான்

news

சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?

news

அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!

news

என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!

news

இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

news

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!

அதிகம் பார்க்கும் செய்திகள்