பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், பெங்களூரில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
21வயது பெண் நடனக் கலைஞருக்கு மிகவும் மோசமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலைமறைவாக இருந்தவர் ஜானி (எ) ஷேக் ஜானி பாஷா. இவர் தற்போது பெங்களுருவில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் 16 வயதாக இருந்தபோது இந்த சித்திரவதைகளை சந்தித்தார் என்பதால் ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்குப் பாய்ந்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் ரஜினி, விஜய், தனுஷ் மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜூன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர். அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவாலா, மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே, காந்த கண்ணழகி, ரவுடி பேபி, ஜாலியோ ஜிம்கானா, புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி உள்ளிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற பாடலுக்காக 2022ம் ஆண்டு சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் ஜானி மாஸ்டர் மீது 21 வயது நிரம்பிய அவரது முன்னாள் உதவி நடன பெண் கலைஞர் பாலியல் புகார் கொடுத்தார். அதில், கடந்த 2019 ஆண்டு முதல் ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்பிடிப்புக்கு சென்ற இடங்களில் எல்லாம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். மேலும், 21 வயதாகும் தன்னை 16 வயதில் இருந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதற்கு அவரது மனைவியும் உடந்தை என்றும் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஆந்திர போலீசார், ஜானி மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தெலுங்கானா ஃபிலிம் சேம்பர் தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும் அவர் உறுப்பினராக உள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். தற்போது ஜானி மீது போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மலையாள சினிமா உலகில் ஹேமா கமிட்டி ஏற்படுத்திய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், தெலுங்குப் பட டான்ஸ் மாஸ்டரான ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட ஜானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஹைதராபாத்திற்கு மாற்றப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}